உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள லுகன்ஸ்க் பிராந்தியத்தில் 80 சதவீத பகுதிகளை ரஷ்யா தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருப்பதாக மாகாண கவர்னர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முன்பு வரை, லுகன்ஸ்க் பிராந்தியத்தில் 60 சதவீத பகுதிகளை உக்ரைன் அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்த வாரத்தில் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதியில் படைகளை குவித்து தாக்குதலை புதுப்பித்துள்ள ரஷ்யா, லுகன்ஸ்க் பிராந்தியத்தில் தாக்குதலை வலுப்படுத்தியிருப்பதாக ஹைடாய் தெரிவித்துள்ளார்.
லுகன்ஸ்க் மாகாணத்தில் உள்ள க்ரெமின்னா நகரை கைப்பற்றியுள்ள ரஷ்யா, அடுத்தகட்டமாக ரூபிஷ்ஷே மற்றும் பொபாஸ்னா நகரங்களை குறிவைத்திருப்பதால் அங்கிருந்து வெளியேறுமாறு பொதுமக்களை வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.