ரஷ்யாவின் ஏவுகணை சோதனையால் அச்சுறுத்தல் இல்லை என அமெரிக்கா ராணுவத் தலமையகமான பெண்டகன் தெரிவித்து உள்ளது.
ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மட் ஏவுகணை சோதனை வழக்கமானது என்றும் சோதனை குறித்து முன்கூட்டியே ரஷ்யா தெரிவித்ததாகவும் பெண்டகன் கூறியுள்ளது.
அடுத்த தலைமுறைக்கான அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக ரஷ்யா சோதித்த நிலையில், ரஷ்யா மீது தாக்குதல் நடத்த நினைக்கும் நாடுகள் இனி இரு முறை யோசிக்க வேண்டும் என அதிபர் புதின் தெரிவித்தார்.