விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் மூலம் 2010ஆம் ஆண்டு ஈராக், அமெரிக்கப் போர்கள் குறித்த அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. . 2012ஆம் ஆண்டு அசாஞ்சே ஈக்குவடார் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார்.
அதன்பின்னரும் தொடர்ந்து ரகசியங்களை வெளியிட்டதால் அடைக்கலம் தர ஈக்குவடார் தூதரகம் மறுத்துவிட்டது. 2019ஆம் ஆண்டு அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் அமெரிக்காவுக்கு நாடுகடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை நாடு கடத்துவது பற்றி இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேலிடம் உள்ளது. அசாஞ்சே தனது பக்க நியாயங்களை மே 18 வரை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.