செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இலங்கை போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு... காலவரையற்ற ஊரடங்கு அறிவிப்பு

Apr 20, 2022 03:41:55 PM

இலங்கை ரம்புக்கனாவில் மக்கள் போராட்டம் கலவரமாக வெடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில் காலவரையற்ற ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அதிபர் கோத்தபய பதவி விலகக் கோரி நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. ஒரு மாதத்தில் இரு முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால் கொதித்தெழுந்த மக்கள் கொழும்பு அடுத்த ரம்புக்கனா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாருக்கு, பொது மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. கற்களை வீசி தாக்குதல் நடத்திய மக்களை தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் போலீசார் விரட்டியடித்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, ரம்புக்கனா பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். முக்கியச் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார், ராணுவம், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வீதிகள், முக்கியச் சாலைகள் பொது மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காட்சி அளிக்கின்றன.

மேலும் மக்களுக்கு கூடுதல் தலைவலியாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபாயக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 90 நாட்களுக்கு கடும் மருந்து தட்டுப்பாடு நிலவும் என புதிதாக பதவியேற்ற சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது கண்மூடித்தன தாக்குதல் நடத்தி போலீசார் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே இலங்கையின் பணவீக்கம் 74சதவீதமாக உயர்ந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் உள்ளரங்கு நிகழ்வு மற்றும் பொது போக்குவரத்தை தவிர்த்து மற்ற இடங்களில் முகக்கவசம் அணிய அவசியமில்லை என அரசு அறிவித்து உள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. 


Advertisement
ரஷ்யாவை சேர்ந்த பிரபல பாலே நடன கலைஞருக்கு பிரியா விடை..
கின்னஸ் சாதனை நாள்: உலகின் உயரமான, குட்டையான பெண்கள் சந்திப்பு
காசாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..
பிரிட்டன் பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் இந்திய துணைத் தூதரகம் - பிரதமர் மோடி
பிரான்ஸ் ராணியின் வைர நெக்லஸ் ஏலத்தில் விற்பனை.. இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது
கிழக்கு ஆப்பரிக்காவில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏரியின் தெற்கே உள்ள ருசிசி அணையில் நீரோட்டம் பாதிப்பு
லண்டனில் இளம் பெண்ணின் சடலம் காரில் இருந்து மீட்கப்பட்டது குறித்து விசாரணை
ரஷ்யாவுடனான போரை அடுத்த ஆண்டு முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை
நாசாவிற்குப் போட்டியாக சீனா அமைத்துவரும் 'டியாங்காங்' விண்வெளி மையம்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement