மெக்சிகோவில் உயிரியல் பூங்காவில், வெப்பத்தால் வாடும் விலங்குகளுக்கு ஐஸ்கிரீம் வழங்கப்பட்டன.
அங்கு சுமார் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் நிலையில், விலங்குகள் உயர் வெப்பநிலையை சமாளிக்க ஏதுவாக பூங்கா பணியாளர்கள், ஒவ்வொரு விலங்களுக்கும் ஏற்றவாறு பிரத்யேகமாக ஐஸ்களை தயார் செய்தனர்.
சிறுத்தைப்புலிகளுக்கு மாமிசத்தால் ஆன ஐஸ்களையும் கருப்பு ஹவ்லர் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு பழங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஐஸ்களையும் வழங்கினர்.
மேலும் விலங்குகளின் இருப்பிடங்களுக்கு அருகில் குழிகள் தோண்டப்பட்டு, அதில் நீரை நிரப்பி விலங்குகள் குளியலாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், விலங்குகள் அந்த நீர் குழிகளில் குளித்து மகிழ்கின்றன.