தென்பசிபிக் தீவு நாடான சாலமன் தீவுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ள நிலையில் அதனால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்புகள் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சீனப் பாதுகாப்பு மற்றும் கடற்படைக் கப்பல்களை அத்தீவில் நிலைநிறுத்த வரைவு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் தீவில் சீனா ராணுவத் தளத்தைக் கட்டமைக்க அனுமதி மறுத்துள்ளதாக சாலமன் தீவுகளின் பிரதமர் மனேச சோகவரே தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தால் சாலமன் தீவில் சீனா படைகளை நிறுத்த வழிவகை கிடைத்துள்ளதால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் சாலமன் தீவில் இருந்து 9ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்தியா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு இந்த ஒப்பந்தத்தால் நேரடியாகவோ, உடனடியாகவோ பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.