அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்பைடர் மேன்- நோ வே ஹோம் படத்தை 292 முறை தொடர்ச்சியாக பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Ramiro Alanis என்ற பெயர் கொண்ட அந்த நபர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ந்தேதி அன்று இந்த திரைப்படத்தை முதன்முதலில் பார்த்தார்.
அப்போது முதல் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 15ந்தேதி வரை 292 முறை இந்த படத்தை அவர் பார்த்துள்ளார். இதற்காக அவர் 720 மணி நேரத்தை செலவிட்டுள்ளார்.