உக்ரைன் போர் விவகாரத்தால் தடை செய்யப்பட்ட ரஷ்ய மற்றும் பெலாரஸ் நாடுகளின் சரக்கு லாரிகள், போக்குவரத்து அனுமதிக்காக போலந்து எல்லையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இரு நாடுகளின் சரக்கு வாகனங்களுக்கு தடை விதித்துள்ளன. இதனால் போலந்து எல்லையான Kukuryk-Kozlovichi பகுதியில் நீண்ட தூரத்திற்கு லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன.
எளிதில் கெடக்கூடிய உணவுப் பொருட்கள், மருந்து விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அனுமதி மறுப்பு காரணமாக தடைபட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.