உலக நாடுகளுக்கு வழங்க வேண்டிய 51 பில்லியன் டாலர் கடனை உடனடியாக திருப்பித் தர இயலாது என அறிவித்த இலங்கை, நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு 21 விமானங்களை குத்தகை அடிப்படையில் வாங்க முடிவு செய்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தட்டுப்பாடு ஏற்பட்டு விண்ணை முட்டும் அளவுக்கு விலையுயர்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் 24 முதல் 35 விமானங்களை வாங்கவும், பழைய விமானங்களை மாற்றவும் முடிவு செய்து அதற்கான நான்கு முன்மொழிவுகளை அரசு வெளியிட்டுள்ளது.
இதனிடையே அன்னியச் செலாவணி கையிருப்பு பற்றாக்குறை காரணமாக நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு பங்குச் சந்தை வர்த்தகத்தை மூடக்குவதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.