அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் சட்ட விரோத கும்பலுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்.
கொலம்பியாவில் உள்ள வணிக வளாகத்தில் சமூக விரோத கும்பலுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வன்முறையில் முடிந்ததாக கூறப்படுகிறது. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வளாகத்தில் இருந்த 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
3 பேர் துபாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க ஓடிய போது நெரிசலில் சிக்கி சிலர் காயமடைந்தனர்.