இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அந்நாட்டு உயரதிகாரிகள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாலும், ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வதாலும் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.