ரஷ்யாவின் படையெடுப்பால் உருக்குலைந்த உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் ராணுவ உதவிகளும் கனரக ஆயுதங்களும் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைன் நகரங்களைக் குறிவைத்து ரஷ்யப் படையினர் கடும் தாக்குதல்களைத் தொடுத்து பெரும் உயிர்ச்சேதம் பொருட்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது என்று அமெரிக்கா சாடியுள்ளது.
டான்பாஸ் மாகாணத்தை ரஷ்யப் படைகள் குறி வைத்து முன்னகர்ந்து வருவதால் உக்ரைன் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக ஆயுதங்களை வழங்கப்போவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.