ஒமைக்ரான் வகை கொரோனா வைரசின் மேலும் இரண்டு புதிய துணை வகைகளான பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 ஆகியவற்றின் பரவல் தன்மை மற்றும் அதன் தீவிரம் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலும், சீனாவின் ஷாங்காய் நகரத்திலும் ஒமைக்ரானின் பி.ஏ.2 வகை அதிகம் பரவி வரும் நிலையில், அங்கு தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சில நாடுகளில் பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 வகை வைரஸ்களின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அது பிற வகை வைரஸ்களை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இதனிடையே, கனடா நாட்டின் ஒன்டாரியா மாகாணத்தில், கொரோனா வைரசின் ஆறாம் அலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அந்நாட்டின் மருத்துவ நிபுணர்கள், வரும் வாரங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.