லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஷ் சையத்திற்கு 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத் மீது பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி வழங்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இது தொடர்பான மேலும் இரு வழக்குகளின் விசாரணை லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றன.
அப்போது, ஹபீஸ் சையத்திற்கு சிறைத் தண்டனையுடன், அவரது சொத்துகளையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், வழக்கில் அவருக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.