இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில், அதிபர் பதவியில் இருந்து கோத்தபய விலகக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் உணவுப்பொருட்கள், மருந்துகள், எரிவாயு ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மணி நேர மின்வெட்டும் நிலவுகிறது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கலந்துகொண்டார்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, பிரதமர் உட்பட்ட அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்றும், இடைக்கால நிர்வாகம் அமைக்க வேண்டும் வலியுறுத்தினார்.
இடைக்கால நிர்வாகத்தில் அனைத்துக் கட்சியினரும் இடம்பெற வேண்டும் என்றும், நட்பு நாடுகளுடன் இணைந்து பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதிபர் பதவி விலகுவார் என்ற உடன்படிக்கையின் அடிப்படையில் தான் எந்தவொரு தீர்மானத்தையும் விவாதிக்க முடியும் என எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.