அப்பாவி மக்கள் ரஷ்யாவின் பீரங்கிகளால் நசுக்கப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நகரங்களில் ரஷ்யப் படையினர் அப்பாவி மக்களை குறி வைத்து தாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.ரஷ்யாவைப் போர் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
புச்சா நகரில் அப்பாவி மக்களின் நாக்குகளை அறுத்தல், கிணற்றில் தூக்கிப் போட்டு கொல்லுதல், கத்தியால் கழுத்தை அறுத்தல், பெண்களை பாலியல் கொடுமை செய்து கொல்லுதல் போன்ற கொடுமைகளை அவர் பட்டியலிட்டார். ரஷ்யப் படையினர் இந்தக் கொடுமைகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஜெலன்ஸ்கி சாடினார்.