உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதில் அங்குள்ள குடியிருப்புக் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்திருப்பதை காட்டும் டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.
மரியுபோல் நகரை தங்கள் வசமே வைத்திருக்கும் நோக்கில் உக்ரைன் படைகளும், அந்நகரை கைப்பற்றிவிடும் நோக்கில் ரஷ்ய படைகளும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே மாறி மாறி கடுமையாக சண்டையிட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே அங்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் ஏராளமானோர் வீடுகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் குறைந்த அளவிலான உணவு, மின்சாரம் மற்றும் தண்ணீருடன் வாழ்ந்து வருகின்றனர்.