உக்ரைனில் உள்ள ஒடேசா நகரில் கருங்கடலை ஒட்டி அமைந்துள்ள துறைமுகத்தில் இருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 3 எரிபொருள் கிடங்குகளை ரஷ்ய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தாக்கி அழித்துள்ளது.
இதனை உறுதி செய்துள்ள ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம், தாக்கி அழிக்கப்பட்ட எரிபொருள் சேமிப்பு கிடங்கில் இருந்தே மைக்கோலேவ் நகரில் உள்ள உக்ரைன் படைகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளது.