பெரு நாட்டில் கடலில் கலந்த எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 39 பறவைகள் குணம் அடைந்ததால், அவை மீண்டும் கடலில் விடப்பட்டன.
கடந்த ஜனவரி மாதம் 15ந்தேதி அன்று லிமா கடற்பகுதியில் Repsol's La Pampilla எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேறிய 10ஆயிரம் பேரல் எண்ணெய் கசிவுகள் கடலில் கலந்தன.
அதனால் பறவைகள் உள்பட 300க்கும் மேற்பட்ட விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பறவைககளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உரிய சிகிச்சை அளித்ததை அடுத்து குணம் அடைந்தன.
இந்த நிலையில் குணம் அடைந்த 39 பறவைகள் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் பாதுகாப்பாக மீண்டும் கடலில் கொண்டு போய் விடப்பட்டன.