நெதர்லாந்தின் ஸ்வோல் (Zwolle) நகரில் உள்ள மெக்டொனால்டு உணவகத்திற்குள் மர்ம நபர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
வாடிக்கையாளர் போன்று உணவகத்திற்குள் நுழைந்த அந்த மர்ம நபர், உணவை ஆர்டர் செய்துவிட்டு மேஜையில் அமர்ந்திருந்துள்ளான்.
பின்னர், எதிரே உணவருந்திக் கொண்டிருந்த இருவரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதில், படுகாயமடைந்த இருவரும் உணவகத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம் உணவகத்தில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.