இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் இதுவரை இல்லாத நிகழ்வாக நாளொன்றுக்கு 13 மணிநேர மின் தடையை இன்று முதல் அரசு அமல்படுத்தியுள்ளது.
சுற்றுல்லாத்துறை முடக்கம், பணவீக்கம், கடும் பொருளாதார நெருக்கடி காரணங்களால் நிதி பற்றாக்குறையில் இலங்கை சிக்கித் தவிக்கிறது. டீசல், பெட்ரோல் பற்றாக்குறை, நிலக்கரி தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது.
நாளொன்றுக்கு 10 மணி நேர மின்தடை அமலில் இருந்த நிலையில் சிலோன் மின்சார வாரியத்தின் வேண்டுகோளை ஏற்று 13 மணி நேரமாக நீட்டித்து அரசு அறிவித்துள்ளது.
கடும் மின் தடையால் தேயிலை உற்பத்தி, உள்ளிட்ட தொழில்கள் முடங்கும் என்றும் அதனால் அரசுக்கு கூடுதல் நிதி பிரச்சினை ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.