காங்கோ நாட்டில், ஐக்கிய நாடுகளின் ஹெலிகாப்டர் ஒன்று போராளி குழுவினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமைதி காக்கும் படையைச் சேர்ந்த 8 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஞாயிற்றுகிழமை, வட கிவு மாகாணத்தில், காங்கோ ராணுவத்தினருக்கும், மார்ச் 23 இயக்க போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.
சண்டை ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டரை மார்ச் 23 இயக்கத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதில் பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் 6 பேர் உள்பட அதில் பயணித்த 8 வீரர்களும் கொல்லப்பட்டனர்.