நட்புறவு இல்லாத நாடுகளின் மக்களுக்கு விசா வழங்க கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையால் ரஷ்யா மீது அதிருப்தியடைந்த மேற்கு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை அமல்படுத்தின.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நட்புறவு இல்லாத நாடுகளின் மக்களுக்கு விசா வழங்க கட்டுப்பாடுகள் வதிக்க உள்ளதாகவும், விரைவில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு அதிபர் புதின் ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இதனால் பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மக்கள் ரஷ்யாவுக்குள் வர முடியாத சூழல் ஏற்படும் என செர்ஜே தெரிவித்தார்