இங்கிலாந்தில் வசந்தகாலம் தொடங்கியுள்ளதன் எதிரொலியாக மிதமான வெப்பத்துடன் கூடிய இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது.
கடந்த மாதம் வரை பனிப்பொழிவு கொட்டித் தீர்த்து கடும் குளிர் நிலவி வந்த சூழலில் தற்போது வசந்த காலம் தொடங்கி 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு வெப்பநிலை காணப்படுகிறது.
இந்த சீதோஷ்ணம் பொதுமக்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மிதமான வெப்பத்திற்கு மத்தியில் லண்டன் தேம்ஸ் நதியின் அழகிய தோற்றத்தை காட்டும் டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.