சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் பெய்த மழையால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்காலிக சாலை அமைக்கப்பட்டு மீட்புப் பணிகள் தொடருகிறது.
கடந்த திங்கட்கிழமை குன்மிங்கில் இருந்து குவாங்சூ நோக்கிச் சென்ற ஈஸ்டர்ன் ஏர்லைன் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 - 800 ரக விமானம், குவாங்சி மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்த நிலையில், விமானத்தில் இருந்த 2 கருப்பு பெட்டிகளில் ஒரு கருப்புப்பெட்டி மீட்கப்பட்டுள்ளது. மற்றொன்றை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சேறும் சகதியுடன் இருப்பதால் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, பொதுமக்களின் உதவியுடன் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு தற்காலிக சாலை அமைக்கப்பட்டு தேடுதல் பணி தொடருகிறது.