உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தை நெருங்கிய நிலையில், நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நடைபெறுகிறது.
இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 30 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஜி-7 தலைவர்கள் கூட்டத்திலும் ஜோ பைடன் பங்கேற்று பேசுகிறார். உக்ரைனுக்கு அடுத்த கட்ட ராணுவ உதவி, அந்நாட்டு மக்களுக்கும், அகதிகளுக்கும் நிவாரண உதவிகள் அளிப்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய கவுன்சில் அமர்விலும் ஜோபைடன் கலந்து கொள்ளும் ஜோ பைடன், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பதுடன், தற்போதைய தடைகளை மேலும் இறுக்குவது பற்றியும் விவாதிக்க வாய்ப்புள்ளது.