சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை அடுத்து, அந்நாட்டில் ஒரே நாளில் சுமார் 74 சதவீத விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் குவாங்சோ நகரை நோக்கிச் சென்ற போது, மலைப்பகுதியில் சுமார் 29 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நிகழ்ந்த இடத்தில் இரவு, பகலாக மீட்பு பணிகள் தொடரும் நிலையில் விமானத்தில் பயணித்த ஒருவர் கூட இதுவரை உயிருடன் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதால், நேற்று திட்டமிடப்பட்ட 11,800 விமான சேவைகளில் 74 சதவீத விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பரபரப்பான உள்நாட்டு வழித்தடங்களில் ஒன்றான பெய்ஜிஷ் - ஷாங்காய் இடையே 34 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.