ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உருக்குலைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 1 கோடி யுவான் மதிப்பில், மனிதாபிமான உதவிகளை வழங்க உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Wang Wenbin, சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் உக்ரைனுக்கு கூடுதலாக 1 கோடி யுவான் மதிப்பில் மனிதாபிமான உதவியை வழங்கும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மனிதாபிமான அடிப்படையில், உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் உள்பட 50 லட்சம் யுவான் மதிப்பிலான நிவாரண பொருட்கள் உக்ரைனுக்கு வழங்குவதாக சீனா அறிவித்தது.