உக்ரைன் யுத்தம் காரணமாக ஆட்டோ மற்றும் மின்னணு சாதனங்களுக்கான நிக்கல், பிளாட்டினம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விநியோகச் சங்கிலி அறுபடும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த இரு நாடுகளிடமிருந்தும் நியான் கேஸ் , ரசாயனப் பொருட்களின் விநியோகம் தடை பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மற்றும் மின்னணு சாதனங்கள் துறை போன்றவை பொறுத்திருந்து பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
போர் காரணமாக உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயரக்கூடிய நிலையும் ஏற்பட்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.