செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

24 வது நாளாக தொடரும் தாக்குதல்... உக்ரைனில் குண்டு மழை..!

Mar 19, 2022 09:04:56 PM

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 24ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைனின் தலைநகரான கீவை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைனின் முக்கிய நகரங்களை முழுமையாக கைப்பற்ற தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, கீவ் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு கட்டிடங்கள் உள்ளிட்டவை மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் உள்ளிட்ட 220க்கும் மேற்பட்டோர் கீவ் நகரில் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 900 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கீவ் நகருக்கு வெளியே ரஷ்ய படைகள் கைப்பற்றிய 30க்கும் மேற்பட்ட இடங்களை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல், மெலிடோபோல் நகரை தங்களது கட்டுப்பாட்டிற்குள் ரஷ்ய ராணுவம் கொண்டுவந்துள்ள நிலையில், அதனை மீட்க உக்ரைன் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலின் புறநகர் பகுதிகளை சுற்றிவளைத்துள்ள ரஷ்யா, தாங்கள் நகரின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக அறிவித்துள்ளது. அங்கு அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய இரும்பாலைகளில் ஒன்றான அசோவ்ஸ்டல் இரும்பாலையை ரஷ்ய படைகள் தாக்கி அழித்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்ட உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, போரின்போது ஏற்பட்ட இழப்புகளில் இருந்து ரஷ்யா மீண்டு வர பல தலைமுறைகள் ஆகும் என்றார். மேலும், தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நகரங்களுக்கு வரும் மனிதாபிமான உதவிகளை ரஷ்ய படைகள் தடுத்து நிறுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Advertisement
இந்தியா உடனான நட்பு இஸ்ரேலுக்கு கிடைத்த வரம்.. ஐ.நா. மாநாட்டில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு புகழாரம்
"ஹெஸ்பெல்லாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும்" ஐ.நா.வில் இஸ்ரேல் பிரதமர் உரையாற்றிய அடுத்த சில மணி நேரத்தில் தாக்குதலை தொடுத்த இஸ்ரேல்
ஈரானில் தங்களால் தாக்க முடியாத இடமே இல்லை.. போருக்குப் போரே தீர்வு - இஸ்ரேல் பிரதமர்
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விவாதத்தில் பாடல் பாடிய டொனால்டு டிரம்ப்
புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டம் - அதிபர் ஜோ பைடன் கையெழுத்து
இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹெஸ்போலா கமாண்டர் உயிரிழப்பு
லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா தூதரகம் அறிவுறுத்தல்
அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு: ஜெலன்ஸ்கி
அமெரிக்காவின் முன்னணி டிராக்டர் நிறுவனம் 2 தொழிற்சாலைகளை மூட முடிவு
2025-ல் நடைபெற உள்ள European GT4 Championship மோட்டார் பந்தயத்தில் நடிகர் அஜித் பங்கேற்பதாகத் தகவல்

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்


Advertisement