அமெரிக்காவில் உக்ரைன் அதிபரின் பொம்மைகளை வாங்க மக்கள் காட்டிய ஆர்வத்தால் கணிசமான நிதி திரண்டுள்ளது.
அந்நாட்டின் சிகாகோவுக்கு அருகே உள்ள நெப்பர்வில்லேவில் பொம்மை தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ள ஜோ துருபியா, உக்ரைனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி அளிக்க ஜெலன்ஸ்கி மற்றும் அந்நாட்டு குடிமக்களின் தாக்குதல் ஆயுதமாக மாறி உள்ள பெட்ரோல் குண்டு வடிவில் பொம்மைகள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வைத்தார்.
மக்கள் ஆர்வத்துடன் வாங்கியதால், 1,45,000 டாலர் நிதி திரண்டுள்ளதாகவும், அதன் மூலம் மருந்து பொருட்களை வாங்கி உக்ரைனுக்கு அனுப்ப உள்ளதாகவும் ஜோ துருபியா தெரிவித்துள்ளார்.