ரஷ்யாவின் படையெடுப்பை உக்ரைனால் இன்னும் எத்தனை நாளுக்குத் தாக்குப் பிடிக்க முடியும் ? உக்ரைன் மீது படையெடுத்த புதின் இந்த யுத்தம் ஓரிரு நாட்களில் முடிந்து விடும் என்றே நம்பியிருந்தார்.
ஆனால் இருபது நாட்களுக்கு மேலாகியும் ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் உறுதியுடன் போராடி வருகின்றனர். இந்நிலையில் வான்வெளியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா முயன்று வருகிறது.
ரஷ்யாவிடம் ஆயிரத்து 391 போர் விமானங்கள் உள்ளன. ஆனால் உக்ரைனிடம் வெறும் 132 விமானங்களே உள்ளன. அதே போல் ரஷ்யாவின் 948 ஹெலிகாப்டர்களுக்கு எதிராக உக்ரைனிடம் இருப்பதோ 55 தான். ரஷ்யாவின் பாதுகாப்பு பட்ஜெட் உக்ரைனை விட பத்து மடங்கு அதிகம்.
இருந்தும் ரஷ்யாவால் முழுமையாக உக்ரைன் வான் பரப்பை தன் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
உக்ரைனின் சாமர்த்தியமான நடவடிக்கைகளால் அதன் விமான தளங்களைக் கைப்பற்ற முடியாமல் ரஷ்யா திணறுகிறது.ஆயினும் இன்னும் எத்தனை நாளுக்குதான் உக்ரைன் தனது நிலத்தையும் வானத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.