தென்கொரியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 6 லட்சத்தை கடந்துள்ளது.
24 மணி நேரத்தில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 328 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதுடன், ஒரே நாளில் கொரோனா பாதித்த 429 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக தொற்று பாதித்தவர்களில் 62 பேர் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளால் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது முதலே, அந்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸின் அதிவேக பரவும் தன்மை காரணமாகவே அந்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருவதாக கூறப்படுகிறது.