ரஷ்யாவில் விற்பனையாகும் மருந்துகளின் லாபத்தை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைஸர் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், ரஷ்யாவில் புதிய மருத்துவ சோதனைகளை நடத்தப் போவதில்லை என்றும், சோதனைகளுக்கு புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவிற்கு மருந்து வழங்குவதை நிறுத்தப்போவதில்லை என்று தெரிவித்துள்ள அந்நிறுவனம், ஆனால் ரஷ்யாவிடமிருந்து கிடைக்கும் அனைத்து லாபங்களையும் உக்ரைனுக்கான மனிதாபிமான ஆதரவிற்கு நன்கொடையாக அளிப்பதாக ஃபைசர் தெரிவித்துள்ளது.