உக்ரைன் போர் எதிரொலியாக நியூசிலாந்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்களை அது பாதிக்காத வண்ணம் அந்நாட்டு அரசு சலுகைகளை அறிவித்துள்ளது.
எரிபொருளுக்கான கலால் வரியை குறைப்பதாகவும், 3 மாதங்களுக்கு பொதுப்போக்குவரத்து கட்டணங்கள் பாதியாக குறைக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் உணவு மற்றும் கட்டுமானத்திற்கு தேவைப்படும் மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 நியூசிலாந்து சென்ட்கள் குறைக்கப்படும் எனவும், இதன் மூலம் 40 லிட்டர் பெட்ரோல் 11 நியூசிலாந்து டாலர்களுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.