உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் அமெரிக்க செய்தியாளர் உட்பட சில வெளிநாட்டவர்கள் உயிரிழந்தனர்.சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நியுயார்க்கை சேர்ந்த பிரெண்ட் ரெனாட் என்ற 50 வயது செய்தியாளர் உடல் துப்பாக்கித் தோட்டாக்களால் துளைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதனிடையே உக்ரைன் போலந்து எல்லை அருகே நடைபெற்ற கடுமையான யுத்தத்தில் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தவர்கள் உட்பட 180 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.