உக்ரைன் தலைநகர் கீவை, ரஷ்ய படைகள் நெருங்கி வரும் நிலையில், அங்குள்ள தேவாலாயத்தில் நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்ற உக்ரைன் வீரர்களின் துப்பாக்கிகளுக்கு ராணுவ மதகுருமார்கள் ஆசீர்வாதம் அளித்தனர்.
கீவ்வில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் முகாமிட்டுள்ள ரஷ்ய படைகள், அடுத்த சில நாட்களில் தலைநகரை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவாலயங்களில் நடைபெற்ற ஞாயிறு திருப்பலியில் மக்களும், ராணுவத்தினரும் பங்கேற்றனர். கீவ் நகர வீதிகளில், வான் தாக்குதலை எச்சரிக்கும் சைரன் ஓசையும், தேவலயத்தின் மணி ஓசையும் இணைந்து ஒலித்தன.