தென்கொரியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரே நாளில் அங்கு 3 லட்சத்து 83 ஆயிரத்து 651 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 269 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிப்பே தினசரி தொற்று பாதிப்புகள் தொடர்ந்து உச்சமடைந்து வருவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
கொரோனா தொற்று அதிகரிப்புக்கு மத்தியிலும் அந்நாட்டில் கடந்த 9-ம் தேதி திட்டமிட்டபடி அதிபர் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங் - ஐ தோற்கடித்து மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த யூன் சுக் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.