உக்ரைனின் அணுசக்தி நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் மரியானோ க்ரோஸி, செர்னோபிலில் கதிர்வீச்சு கசிவுக்கான உடனடி ஆபத்து இல்லை என்று குறிப்பிட்டார்.
மேலும் அப்பகுதியில் மின் திறனை மீட்டெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட க்ரேஸி, தற்போது மிகவும் பலவீனமான சூழ்நிலை நிலவுவதாகக் குறிப்பிட்டார்.
இதனிடையே ரஷ்ய, உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று துருக்கியில் சந்திக்கும் நிலையில் அவர்கள் இருவரையும் மரியானோ க்ரோஸி சந்தித்துப் பேச உள்ளார்.