உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டுமென போப் பிரான்சிஸ் இதயப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தேவையான மனிதாபிமான நடவடிக்கைகள் உண்மையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முற்றுகையிடப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் அங்கு செல்வதற்கான நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று இதயப்பூர்வமாக வேண்டுகோளை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.