கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் பெரும்பங்கு வகிக்கும் விசா கார்டு மற்றும் மாஸ்டர் காடுகளின் சேவை ரஷ்யாவில் நிறுத்தப்பட்டுள்ளன.
ரஷ்யாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளை வரும் நாட்களில் முடிவுக்கு கொண்டுவர இருப்பதாக விசா நிறுவனம் தெரிவித்துள்ளது. இனி விசா அட்டைகள் மூலம் ரஷ்யாவுக்கு உள்ளும், வெளியேயும் எந்த பரிவர்த்தனையும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ரஷ்ய வங்கிகளால் வழங்கப்படும் கார்டுகளை ஆதரிக்கப் போவதில்லை என மாஸ்டர் கார்டு நிறுவனம் கூறியுள்ளது. மேலும் வெளிநாடுகளில் ரஷ்ய ஏடிஎம்களில் மாஸ்டர் கார்டு பலனளிக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.