ரஷ்ய, உக்ரைன் போருக்கு நடுவே இஸ்ரேலிய பிரதமர் ரஷ்ய அதிபரை நேரில் சந்தித்துப் பேசினார்.
நேற்று மாலை கிரெம்ளின் மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட்டும், புதினும் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரம் நீடித்ததாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புதினும் பென்னட்டும் உக்ரைனின் நிலைமை பற்றி விவாதித்தனர் என்று தெரிவித்தார். உக்ரைனுடன் போர் தொடங்கியதில் இருந்து புதினைச் சந்தித்த இரண்டாவது தலைவர் பென்னட் என்பது குறிப்பிடத்தக்கது.