ரஷ்யப் படைகளின் முதல் விரோதி என்று குறிவைக்கப்பட்டிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தமது குடும்பத்தினருடன் போலந்து நாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டதாக வெளியான ரஷ்யாவின் ஊடகச் செய்திகளை உக்ரைன் அரசு மறுத்துள்ளது.
ரஷ்ய நாடாளுமன்றத்திலும் சபாநாயகர் தமது உரையில், ஜெலன்ஸ்கி அண்டை நாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டதாகக் கூறினார். ஆயினும் ஜெலன்ஸ்கி இன்னும் உக்ரைன் தலைநகர் கீவ்வில் தான் இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.