ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்துவீச்சில் ஜாம்பவானாக கருதப்படுபவருமான ஷேன் வார்னே காலமானார்.
52 வயதான வார்னே தாய்லாந்தில் உள்ள தனது பங்களாவில் சுய நினைவின்றி கண்டறியப்பட்ட நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
1992ஆம் ஆண்டு முதல் 2007 வரையில் விளையாடிய வார்னே, ஒரு நாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்த ஷேன் வார்னேவின் மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.