உக்ரைனுக்கு கூடுதலாக 120 கோடி யூரோஸ் நிதி வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையில் உக்ரைனுக்கு அதரவுகரம் நீட்டிய ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதக் கொள்முதல், நிதி உதவி வழங்குவதாக அறிவித்தது. மேலும் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்தது.
இந்நிலையில் போரில் துவண்டு போயுள்ள உக்ரைனுக்கு கூடுதலாக 120 கோடி யூரோ பணத்தை நிதியாக வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியத் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்திற்குள் எந்த வித நிபந்தனைகளுமின்றி 600 மில்லியன் யூரோவை உக்ரைனுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.