அமெரிக்காவிற்கு ராக்கெட் எஞ்சின் வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவித்த ரஷ்யா, அவர்கள் இனி துடைப்பம் போன்றவற்றில் பறந்து செல்லட்டும் என கேலி செய்துள்ளது.
உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இதற்கு பதிலடி தரும் வகையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது அதேபோல், அமெரிக்காவுக்கு இனி ராக்கெட் இஞ்சின்களை வழங்குவதில்லை எனவும் ரஷ்யா முடிவெடுத்துள்ளது.
இது குறித்து பேசிய ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் டிமிட்ரி ரோகோசின், அமெரிக்காவுக்கு இதுவரை 122 ராக்கெட் இஞ்சின்களை ரஷ்யா வழங்கியுள்ளதாகவும், அமெரிக்காவின் பல செயற்கைக்கோள் திட்டங்களுக்கு அடித்தளமாக ரஷ்ய இஞ்சின்களே பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.