உலோகத் தொழிலில் கோலோச்சும் ரஷ்ய கோடீஸ்வரர் ஒருவருக்கு சொந்தமான 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு படகை ஜெர்மனி நாட்டு அதிகாரிகள் கைப்பற்றினர்.
உக்ரைன் படையெடுப்பை கண்டித்து ரஷ்ய அரசு மற்றும் அந்நாட்டின் 25 முக்கிய பிரமுகர்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் பிறப்பித்துள்ளது.
அதில் ஒருவரான அலிஷர் உஸ்மனோவ் என்பவருக்கு சொந்தமான சொகுசு படகு, பழுது நீக்கும் பணிகளுக்காக ஜெர்மனியின் ஹேம்பர்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
”டில்பர்” என்ற அந்த 512 அடி நீள சொகுசு படகை ஜெர்மன் அதிகாரிகள் கைப்பற்றினர். நீச்சல் குளம், ஹெலிபேட்கள் என பல்வேறு வசதிகள் கொண்ட இந்த சொகுசு கப்பலை இயக்க 96 மாலுமிகள் தேவைப்படுவார்கள் என கூறப்படுகிறது.