உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தனது எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
எதிரி நாடுகளின் விமானங்கள், ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்த கருவிகளில் ஒன்றாக எஸ்400 விளங்குகிறது. ரஷ்யாவிடம் இருநது ஐந்து எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க இந்தியாவும் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இந்த நிலையில் உக்ரைனில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ரஷ்யாவின் தெற்கில் அமைந்துள்ள நோவோசிபிர்ஸ்க் பகுதியில் எஸ் 400 அமைப்பை பயன்படுத்தி ரஷ்ய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருவதாக நெக்ஸ்டா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படும் நேட்டோ நாடுகளை எச்சரிக்கும் விதமாக இந்த பயிற்சி நடத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது.