உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை மனித கேடயமாகப் பயன்படுத்துவதாக ரஷ்யா தெரிவித்ததை அமெரிக்கா மறுத்துள்ளது.
இது உறுதிப்படுத்தப்படாத தவறான தகவல் என்று அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே உக்ரைன் அரசும் ரஷ்யாவிடம் உக்ரைனின் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாணவர்களை வெளியேற்ற பாதை விடும்படி வலியுறுத்தியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளின் மாணவர்களை ரஷ்யப் படைகள் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாக உக்ரைன் பதிலுக்கு குற்றம் சாட்டியுள்ளது.