ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு தடை விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டித்து அமெரிக்கா ரஷ்யாவின் எரிவாயு மற்றும் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்குமா என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஜோ பைடன் , எதுவும் சாத்தியமில்லை என்று கூறமுடியாது என்றார்.
ரஷ்யா போர்க்குற்றத்தில் ஈடுபட்டதா என்பது குறித்து இப்போது உடனடியாக முடிவெடுக்க முடியாது என்றும் ஜோ பைடன் கூறினார்.ஆனால் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்யா குண்டு வீசி அப்பாவிகளைக் கொன்று வருவதாக வரும் தகவல்கள் குறித்து கேள்வி எழுந்த போது ரஷ்ய ராணுவத்தினர் அப்பாவி மக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருவது உண்மைதான் என்று ஜோ பைடன் குறிப்பிட்டார்.